உலகம்

மதம், இனம், கட்சி, நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு ஒரே தேசமாக நில்லுங்கள்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரின் நெகிழ்ச்சியான பதிவு


கொழும்பு: மக்களுக்கு மதம், இனம், கட்சி, நம்பிக்கைகள் என அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஒரே தேசமாக நிற்க வேண்டும் இலங்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரொஷான் மஹாநாம வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இலங்கை பெரிய அளவிலான பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இலங்கைக்கான அந்நிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெருமளவில் மதிப்பிழந்துள்ளது. இதனால் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால், இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இலங்கை காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உள்ள 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. வரலாற்றில் இல்லாத தொகை இலங்கை குழப்பத்தில் உள்ளது. இதனால் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

போராட்டங்களை தடுக்கும் வகையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உள்ளவர்களுக்கு இலங்கை மட்டைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ரொஷான் மஹாநாம நெகிழ்ச்சியான பதிவொன்றை எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

இந்த நாட்டின் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களை விட நான் எனது நாட்டை நேசிக்கிறேன். ஏனென்றால், சந்தர்ப்பம் கிடைத்தபோது நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இந்த நேரத்தில் மதம், இனம், அரசியல் கட்சிகள் மற்றும் நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு ஒரே தேசமாக நிற்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

போதும் !! ..

இந்த இருண்ட காலத்திலிருந்து எமது அழகிய தாய்நாட்டை விடுவித்து எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான சூழலை உருவாக்குவதற்கான பொதுவான இலக்குடன் இந்த நாட்டு மக்களுடன் நான் நிற்கின்றேன். “

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.