உலகம்

மண் வளத்தை மீட்டெடுக்க குரல் கொடுங்கள்! ஐநா தலைமையகத்தில் சத்குரு ஆற்றிய உரை


படிக்க நேரமில்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெனிவா: ”மண் அரிப்பை தடுத்து, மண் வளத்தை மீட்டெடுக்க, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இப்போதே குரல் கொடுக்க வேண்டும்,” என, ஐ.நா., தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் பேசினார்.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு, ‘மண்ணைக் காப்போம்’ இயக்கத்தைத் தொடங்கி, உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 100 நாள் பைக் சவாரியில் இறங்கியுள்ளார். இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில், மண் பாதுகாப்பு இயக்கத்துக்கு ஆதரவாக, ஐ.நா.வுக்கான, இந்திய நிரந்தர தூதுக்குழு சார்பில், சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

சமீபத்திய தமிழ் செய்திகள்

இதில், சத்குரு பேசியதாவது: உலகின் பல நாடுகளில் மண் வேகமாக தன் வளத்தை இழந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்னை தீர்க்கப்படாமல் இருந்தால், உலக அளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘மண் முற்றிலும் குறைந்து, தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும். உள்நாட்டுக் கலவரம் உருவாகும். அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர வேண்டிய அவல நிலை ஏற்படும்,” என்றார்.

சமீபத்திய தமிழ் செய்திகள்

எனவே, மண் வளத்தைப் பாதுகாக்கத் தேவையான சட்டங்களை இப்போதே இயற்ற வேண்டும். மண் அரிப்பை தடுக்கவும், அதன் வளத்தை மீட்டெடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மக்கள் குரல் கொடுக்க வேண்டியது கட்டாயம். நீங்கள் குரல் எழுப்பவில்லை என்றால், எந்த அரசாங்கமும் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டாது, ”என்று சத்குரு கூறினார்.

விளம்பரம்Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.