தேசியம்

மணமகன் கண்முன்னே அனைத்து புகைப்படங்களையும் அழித்த போட்டோகிராபர்!


திருமண விழாவில் நீண்ட நேர உணவு வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த புகைப்படக்காரர் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் மணமகன் கண்முன்னே அழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய திருமணங்களில் வெட்டிங் போட்டோ ஷூட் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. திருமணங்களில் எது இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் போட்டோ ஷூட் இருக்கும். சமீபத்தில் தனது திருமணத்தில் போட்டோஷூட் செய்வதற்கான பணத்தை மிச்சப்படுத்த நினைத்த மணமகன் தனது நண்பனையே திருமணத்திற்கான போட்டோகிராபராக அமர்த்தியுள்ளார்.

அந்த நபரும் மணமகன் தனது நண்பன் என்பதால் குறைந்த பணத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் திருமணத்தன்று காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை அவருக்கு உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த அந்த போட்டோகிராபர் மணமகன் கண்முன்னே திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட அனைத்து படங்களையும் டெலிட் செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த நபர் கூறியுள்ளதாவது, திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படம் எடுக்க எனக்கு 19 ஆயிரம் ரூபாய் ($ 250) தருவதாகக் கூறினார். மணமகன் எனது நண்பன் என்பதாலேயே குறைந்த பணத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டேன்.

காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை புகைப்படங்களை எடுத்தேன். மாலை 5 மணிக்கு உணவு பரிமாறினார்கள். ஆனால் புகைப்படம் எடுப்பதற்காக என்னை சாப்பிடவிடவில்லை. மேலும், தொடர்ந்து படமெடுத்துக்கொண்டதால் நான் மிகவும் சோர்வடைந்தேன். இதனால் எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனாலேயே மணமகன் முன்னால் எடுத்து அனைத்து புகைப்படங்களையும் அழித்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களைக் குறிப்பிடுகின்றனர்

மேலும் படிக்கவும் வீட்டின் முன் ஏற்பட்ட திடீர் பள்ளம்! அதிர்ச்சியில் மக்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிரவும்

முகநூலில் @ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் !!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *