
Last Updated : 07 Aug, 2023 01:08 PM
Published : 07 Aug 2023 01:08 PM
Last Updated : 07 Aug 2023 01:08 PM

சென்னை: பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது போக்கோ நிறுவனத்தின் எம்6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது போக்கோ எம்6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- போக்கோ எம்5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக எம்6 புரோ 5ஜி வெளிவந்துள்ளது
- 6.79 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷ் 2 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 2 முறை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அப்டேட் செய்து கொள்ளும் வசதி
- ஏஐ சென்சார் உடன் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- 5,000mAh பேட்டரி
- 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 5ஜி நெட்வொர்க் இயக்கம்
- 4ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்ட் கொண்ட போனின் விலை ரூ.10,999
- 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட் கொண்ட போனின் விலை ரூ.12,999
- விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Unleash the Power of 5G with POCOM6PRO5G-The Disrupter
Experience lightning-fast performance with Snapdragon 4gen 2 processor & seamless multitasking with Turbo RAM up to 12GB.Starting at ₹9,999 on Flipkart.
Check out the linkhttps://t.co/M1KBOtTUwb#IntoThe5GSpeedverse pic.twitter.com/zrrtNI29Qq
— POCO India (@IndiaPOCO) August 5, 2023
தவறவிடாதீர்!