Cinema

பொங்கல் ரேஸில் இணைந்த விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ | Katrina Kaif Vijay Sethupathi Merry Christmas release pushed to January 2024

பொங்கல் ரேஸில் இணைந்த விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ | Katrina Kaif Vijay Sethupathi Merry Christmas release pushed to January 2024


சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் படங்களில் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படமும் இணைந்துள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதுன்’. பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் ’அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக்காகிறது. இப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படத்துக்கு ப்ரீத்தம் இசையமைத்துள்ளார்.

தமிழில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். மது நீலண்டன் ஒளிப்பதிவு செய்ய, பூஜா லதா சூர்தி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு தமிழில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *