National

பெங்களூருவில் குப்பையில் கிடந்த ரூ.25 கோடி மதிப்புள்ள போலி அமெரிக்க டாலர்கள் | Fake US dollars worth Rs 25 crore found in garbage in Bengaluru

பெங்களூருவில் குப்பையில் கிடந்த ரூ.25 கோடி மதிப்புள்ள போலி அமெரிக்க டாலர்கள் | Fake US dollars worth Rs 25 crore found in garbage in Bengaluru


பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஹெப்பாலில் குப்பைத் தொட்டியில் ரூ.25 கோடி அமெரிக்க டாலர் நோட்டுகள் 23 கட்டுகளாக கிடந்துள்ளன. இதனை குப்பை சேகரிக்கும் சல்மான் ஷேக் (44) என்பவர் கடந்த 1-ம் தேதி கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

கடந்த 5-ம் தேதி தனது நண்பர்முகமது எலியாஸ் மூலம் அந்தநோட்டுகளை மாற்ற முயன்றுள்ளார். அப்போது அவை கள்ளநோட்டு என தெரிய வந்ததால் மாற்ற முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சல்மான் ஷேக் ஹெப்பால் காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைத்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், போலி அமெரிக்க டாலர்களை ஆய்வு செய்ய சோதனை மையத்துக்கு அனுப்பினர். மேலும் சிலவற்றை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பினர். முதல்கட்ட ஆய்வில் குப்பையில் கிடந்தவை உண்மையான நோட்டுகளை நகலெடுத்து அதேபோல அச்சடிக்கப்பட்டது என தெரிய வந்தது.

இதையடுத்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்தா, இதுகுறித்து விசாரிக்க தனிப்படை ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீஸார் ஹெப்பால் குப்பைத் தொட்டியை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆராய்ந்து வ‌ருகின்றனர்.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *