
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கொத்ரப்பட்டி சரளாபட்டியைச் சேர்ந்தவர் பொய்யன் (50). இவர் மனைவி (45). அதே பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (53). பொய்யன் மகனுக்கு பெண் பார்க்க இலுப்பூரில் இருந்து புதுக்கோட்டை டூவிலர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அன்னவாசல் அருகே உள்ள சத்திரம் சாலையில் வந்தபோது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சோர்ந்து போன மூவரும், சாலையோரத்தில் உள்ள மர நிழலில் கோபுரங்களை நிறுத்தி, சற்றே ஓய்வெடுத்தனர். அப்போது விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மூவர் மீது பயங்கரமாக மோதியது. இதில், தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த பொய்யன் மற்றும் அவரது மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த அன்னவாசல் போலீஸார், தியாகராஜனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிச்சென்றது யார் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை விடுமுறைக்கு சென்றிருந்த கார்மோதி எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.