Business

பிரேசிலில் பஜாஜ் ஆட்டோ புதிய உற்பத்தி தொழிற்சாலை துவக்கம்!

பிரேசிலில் பஜாஜ் ஆட்டோ புதிய உற்பத்தி தொழிற்சாலை துவக்கம்!
பிரேசிலில் பஜாஜ் ஆட்டோ புதிய உற்பத்தி தொழிற்சாலை துவக்கம்!


இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ பிரேசிலில் உள்ள மனாஸ் நகரில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை திறந்துள்ளது. பிரேசில் நாட்டின் அமேசான் மாநில ஆளுநர் மற்றும் அதிகாரிகள், டீலர்கள் மற்றும் பிசினஸ் பார்ட்னர்கள் உள்ளிட்ட பலர் இந்த தொழிற்சாலையின் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமானது இப்போது உலகம் முழுவதும் 100 நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

பஜாஜ் ஆட்டோ, இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாகும். இந்தியாவில் இருந்து அதிக ஆட்டோக்கள் மற்றும் பைக்குகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்ளது. வாகனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்தியாவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு தனது தயாரிப்புகளை வழங்குகிறது. இதற்காக, சில வெளிநாடுகளிலும் பஜாஜ் நிறுவனம் உற்பத்தி தொழிற்சாலையை கொண்டுள்ளது. அந்த வரிசையில், பிரேசில் நாட்டில் பஜாஜ் நிறுவனம் தற்போது தொழிற்சாலையை திறந்துள்ளது.

பிரேசிலில் திறக்கப்பட்டுள்ள பஜாஜின் இந்த புதிய தொழிற்சாலை மொத்தம் 9,600 சதுர மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. மேலும், ஆண்டுக்கு 20,000 வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தற்போதைக்கு ஒரே ஷிஃப்ட் அடிப்படையில் இந்த தொழிற்சாலையை இயக்கவும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் என்ஜின் அசெம்பிளி, வெஹிகிள் அசெம்பிளி மற்றும் டெஸ்ட்டிங் அசெம்பிளி உள்ளிட்ட அனைத்தும் பொருத்தப்பட உள்ளது. மேலும் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்த தொழிற்சாலையை விரிவுப்படுத்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்னு தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்

பிரேசிலில் ஆரம்பத்தில், டாமினர் தயாரிப்பதில் கவனம் செலுத்தி, பின்னர் பல்சர் வகை பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.  பிரேசிலில் ஏற்கனவே கேடிஎம் வகை பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த தொழிற்சாலையை உருவாக்கும் பணிகளில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஈடுபட ஆரம்பித்தது. இதன்படி பார்த்தால், வெறும் ஒரு வருடத்தில் இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டு, வாகனங்கள் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் சப்ளையர்களை ஒருங்கிணைத்து, முக்கிய மோட்டார் சைக்கிள் பாகங்கள் மற்றும் உதிரி பாகங்களை மானாஸிலிருந்து பெறத் தொடங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க: மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் வெலாசிட்டி எடிஷன்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

சிறந்த வீடியோக்கள்

2028ஆம் ஆண்டு பிரேசிலின் வாகன சந்தை கணிசமாக உயரும் என்றும் அந்நாட்டில் 2 கோடியே 37 லட்சம் பைக்குகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 2023 முதல் 28ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 14.2% அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *