தேசியம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகப்படுத்தும் உஜ்வாலா 2.0 திட்டம்


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா 2.0 (பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா – PMUY) திட்டம், உத்தரபிரதேசத்தில் உள்ள மஹோபாவில், செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம், எல்பிஜி இணைப்புகளை வழங்குவதன் மூலம், தொடக்கி வைக்கப்படுகிறது.

நிகழ்வின் போது, ​​பிரதமர் உஜ்வாலாவின் பயனாளிகளுடன் உரையாடுவதோடு, நாட்டு மக்களிடையேயும் உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்தது.

2016 ஆன் ஆண்டு தொடங்கப்பட்ட உஜ்வாலா 1.0 திட்டத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் (பிபிஎல்) குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் ஏப்ரல் 2018 ஆம் ஆண்டில் மேலும் ஏழு பிரிவுகளை (SC/ST, PMAY, AAY, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலைத் தோட்டம், காடு மற்றும் தீவு பகுதி வாசிப்பவர்கள்) சேர்ந்த பெண் பயனாளிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.

மேலும், இந்த திட்டத்தில் எட்டு கோடி எல்பிஜி இணைப்புகளுக்கு என இலக்கு அதிகரிக்கப்பட்டது. இந்த இலக்கு ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஏழு மாதங்கள் முன்னதாகவே இலக்கை அடைந்தது.

2021-22 நித்தியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில், PMUY திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி LPG இணைப்புக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு கோடி கூடுதல் PMUY இணைப்புகள் (உஜ்வாலா 2.0 இன் கீழ்) வழங்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டத்தில் சேர்க்கப்படாத, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, டெபாசிட் இல்லாமல் எல்பிஜி இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி: 70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை

டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்போடு, உஜ்வாலா 2.0 முதல் ரீஃபில் மற்றும் ஹாட் பிளேட்டை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கும். மேலும், இந்த திட்டத்தில் பதிவு செய்ய குறைந்த ஆவணங்கள் பயன்படுத்தவும். உஜ்வாலா 2.0 திட்டத்தில் பலம் பெயர் தொழிலாளர்கள் ரேஷன் கார்டுகள் அல்லது முகவரி சான்றை சமர்ப்பிக்க தேவையில்லை. ‘குடும்ப உறுதியின் ஆவணம்’ மற்றும் ‘முகவரி சான்று’ ஆகிய இரண்டிற்கும் ஒரு சுய வாக்குமூலமே போதுமானது.

உஜ்வாலா 2.0 அனைவருக்கும் எல்பிஜி இணைப்பு என்ற பிரதமரின் குறிக்கோளை எட்ட உதவுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க | பிரதம மந்திரி ஏழை நல்வாழ்வு உணவு திட்ட பயனாளிகளுடன் இன்று பிரதமர் உரையாடல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிரவும்

முகநூலில் @ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் !!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *