தமிழகம்

பாஜக வழக்கறிஞருடன் சேர்ந்து வட்டாட்சியரை தாக்கிய திமுக பிரமுகர்? – காவல்துறையால் கைது! – என்ன நடந்தது?


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் வனிதா செங்கோட்டையன். இவர் திமுக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், ராசிபுரம் அருகே மலையம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் மணல் அள்ள அனுமதி கோரியதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு ராசிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த திமுக செயற்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், தனது மகன் இளங்கவியும், பாஜக வழக்கறிஞர் குமாரும் வட்டாட்சியர் கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறினார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆளுநரை தாக்கியதாக கூறப்படுகிறது.

சிறைபிடிக்கப்பட்ட குமார், இளங்கவி

இதையறிந்த சக ஊழியர்கள் உடனடியாக வனிதா செங்கோட்டையன், அவரது மகன் இளங்கவி, பாஜக வழக்கறிஞர் குமார் உள்ளிட்ட 3 பேரையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்தனர். பின்னர் அரசு ஊழியர்கள் ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ராசிபுரம் வட்டாட்சியரை தாக்கிய வழக்கறிஞர் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் திமுக பிரமுகர் மகன் இளங்கவியையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக, பாஜக பிரமுகர்கள் தாசில்தாரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.