தேசியம்

பாஜகவில் இணைந்த மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர்!


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா (44 வயது) இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் மோங்கியா, வரவிருக்கும் மாநில பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் போது பேசிய மோங்கிய, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். இன்று, நாட்டின் வளர்ச்சிக்கு பாஜகவை விட சிறப்பாக பாடுபடும் கட்சி வேறு எதுவுமில்லை என்று கூறினார்.

பஞ்சாபில் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவின் எஸ்ஏடி ஆகியோருடன் கூட்டணி வைத்து பாஜக பஞ்சாபில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இன்று மோங்கியாவுடன் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஃபதே பஜ்வா, முன்னாள் எம்எல்ஏ அகலிதளம் குர்தேஜ் சிங் குடியானா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்தேவ் சிங் கல்சா, ஓய்வுபெற்ற ஏடிசி மற்றும் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் மதுமீத் ஆகியோருடன் இன்று பாஜகவில் கலந்து கொண்டனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகளில் சேருவது சகஜமான ஒன்றாக மாறியுள்ளது. 2019 பிரதமர் தேர்தலுக்கு முன், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியாளரான அதிஷியை தோற்கடித்து கிட்டத்தட்ட ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்திய அணிக்காக தினேஷ் மோங்கியா 57 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். இடது கை பேட்டரான இவர் ODI கிரிக்கெட்டில் 1230 ரன்களை அடித்துள்ளார். மோங்கிய ODI கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் அடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 147 பந்துகளில் 159* ரன்கள் அடித்துள்ளார்.

மேலும் படிக்கவும் | ஆஷஸ் தொடரை வென்று சாதித்து காட்டிய ஆஸ்திரேலியா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZeeHindustan Tamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *