உலகம்

பாக்., – ஆப்கானிஸ்தான் இடையே எல்லை வேலி பிரச்னைக்கு தீர்வு


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பான பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் 2,600 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பயங்கரவாத ஊடுருவல் மற்றும் கடத்தலைத் தடுக்கவும், எல்லைச் சோதனைச் சாவடிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை அமைக்கவும் பாகிஸ்தான் 2017ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் எல்லையில் வேலி அமைத்து வருகிறது.
எல்லையில் வேலி அமைக்கும் திட்டத்துக்கு பாக்., ஆப்கானிஸ்தான் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் எல்லையில் பணியை நிறுத்துவதாகவும், எல்லையில் பாகிஸ்தான் அமைத்த முள்வேலியை அகற்றுவதாகவும் அச்சுறுத்தினர். இதனால் பாகிஸ்தானில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து இரு தரப்பிலும் பதற்றம் ஏற்பட்டது.
எல்லை வேலி தொடர்பான பதற்றத்தைத் தணிக்க ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பாகிஸ்தான் ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு தரப்பினரும் சுமூகமாக பேசி தீர்வு காண முடிவு செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, பதற்றமான எல்லைப் பகுதியை தலிபான் பாதுகாப்பு அமைச்சர் முல்லா யாகூப் பார்வையிட்டார். அப்போது அவர், ‘‘எல்லையில் வேலி அமைப்பது தொடர்பான பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *