State

பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் | Trains canceled due to maintenance work: Crowds throng Tambaram bus station

பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் | Trains canceled due to maintenance work: Crowds throng Tambaram bus station


தாம்பரம்: பராமரிப்பு பணி காரணமாக சென்னை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக கூடுவாஞ்சேரி வரையும் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக பல்லாவரம் வரையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் பொது மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக விடுமுறை நாட்களில் மட்டும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக வேலை நாளான இன்று (ஆக.5) பராமரிப்பு பணி காரணமாக சென்னை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக கூடுவாஞ்சேரி வரையும், கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக பல்லாவரம் வரையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டில் இருந்து பல்லாவரம் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து துறை சார்பாக தெரிவித்து இருந்த நிலையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக சென்னையின் நுழைவாயிலான தாம்பரத்திலிருந்து பிற பகுதிகளுக்கு செல்வதற்காக பொதுமக்கள் அதிக அளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளதால் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

வெறிச்சோடி காணப்படும் தாம்பரம் ரயில் நிலையம்

இந்நிலையில், போதிய பேருந்துகள் இல்லாததால் வரும் பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பயணித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 150-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 170-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *