வணிகம்

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. விமான டிக்கெட் அதிரடி தள்ளுபடி!


புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்கள் தொடங்கியுள்ளன. இந்த சீசனில் பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு டிக்கெட் சலுகைகளை அறிவித்துள்ளன.

ஏர் ஏசியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமான டிக்கெட்டுகளில் சூப்பர் டீல்களை வழங்குகின்றன. அதன்படி, சென்னை-ஐதராபாத், சென்னை-பெங்களூரு, பெங்களூரு-சென்னை மற்றும் ஜம்மு-ஸ்ரீநகர் ஆகிய வழித்தடங்களில் ஒருவழியாக செல்ல ரூ.1,122 டிக்கெட் விலையை ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.

இந்த சலுகை டிசம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஜனவரி 20 முதல் ஏப்ரல் 15, 2022 வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ஆல்ட்டோ காருக்கு 45,000 தள்ளுபடி… கார் வாங்க சூப்பர் வாய்ப்பு!
மறுபுறம், ஏர் ஏசியா புத்தாண்டு சலுகையாக இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை-பெங்களூரு, பெங்களூரு-சென்னை, சென்னை-ஐதராபாத் ஆகிய வழித்தடங்களில் கட்டணம் ரூ.1122 ஆக இருக்கும்.

டிசம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரையிலான டிக்கெட் முன்பதிவுகளுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும். ஜனவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

1-1-2022 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரு நிறுவனங்களும் டிக்கெட் விலை 1122 ரூபாய் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *