தமிழகம்

பயங்கரவாத செயல்களுக்கான நிதி புகார்; ஜம்மு காஷ்மீரில் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன


ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று 40 இடங்களில் சோதனை நடத்தினர்.

தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களின் அலுவலகங்கள் உட்பட இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த மாதத்தில் இது மூன்றாவது சோதனை.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்துறை என்ஐஏ அதிகாரிகளுடன் சேர்ந்து தோடா, கிஷ்த்வார், ராம்பன், அனந்த்நாக், கந்தர்பால், புட்காம், ரஜோரி மற்றும் சோபியான் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது.

கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூட்டத்தில், 2019 ல் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் ஆதிக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எனவே, பயங்கரவாதத்தால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, ஜூலை 10 ஆம் தேதி, தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கிய வழக்கு தொடர்பாக அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்தனர்.

இதற்கிடையில், ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்திற்கு எதிராக ஒரு புதிய முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களின் வீடுகளையும் குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. ஜமாத்-இ-இஸ்லாமியின் கந்தர்பால் மாவட்ட தலைவர் குல் முகமது போர், அமைப்பின் உறுப்பினர்கள் ஜாகூர் அகமது ரேஷி மற்றும் மெஹ்ராஜ்தின் ரேஷி ஆகியோரின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *