தேசியம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு; தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட தடை .. !!


பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் குறித்து மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நீதிபதி ஜிஎஸ் படேல் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இருவரின் நலனைப் பாதுகாக்கும் வகையிலான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு தொடர்பான உத்தரவுகள், இரு தரப்பினரின் தனிப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கும் வகை, நீதிமன்ற பதிவுகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் வழக்கு விபரங்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நீதிபதி பட்டேல் தனது உத்தரவில், “வழக்கு தொடர்பான உத்தரவில்/தீர்ப்பில், பெயர்களை குறிப்பிடாமல் ‘A vs B’, ‘P vs D’ என்றே எழுதப்படும் வாதி, பிரதிவாதி இருவரின் பெயர் மின்னஞ்சல் முகவரி, மொபைல் அல்லது தொலைபேசி எண்கள், தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலும் (தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல் -PII) உத்தரவில் குறிப்பிடப்படாது “என கூறப்பட்டுள்ளது.

மேலும் “இந்த வழக்குகளில் உத்தரவுகள்/தீர்ப்புகளை வெளியிடுவது பற்றி, குறிப்பிட்ட நீதிமன்றம்” அனைத்து உத்தரவுகளும் தீர்ப்புகளும் தனிப்பட்ட முறையில், தனி அறைகளில் வெளியிடப்படும் மேலும், திறந்த வெளியீடு வெளியிடப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது “மும்பை நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயம் என்றும், ஆன்லைன் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே விசாரணைக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். உதவி ஊழியர்கள் (எழுத்தாளர்கள், பியூன்கள், மக்கள்), நீதிமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

நீதிமன்றம் இது தொடர்பான கூடுதல் கூறுகளில், ” கூடுதல் உத்தரவையும் பொது தளத்திலும் வெளியிட வேண்டும்

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கின் சாட்சிகள், வழக்கமான உறுதிமொழியை தவிர கூடுதலாக, வழக்கு விபரங்களை வெளியிடாமல் இரகசியத்தன்மை பாதுகாப்பேன் என்ற உறுதி மொழியிலும் கையெழுத்திட வேண்டும்.

இவை ஆரம்ப கட்ட வழிகாட்டுதல்கள் மட்டுமே மற்றும் தேவைக்கேற்ப திருத்தம் அல்லது மாற்றத்திற்கு உட்பட்டவை என கூறப்பட்ட நீதிமன்ரம். இந்த உத்தரவின் சராசரி அம்சத்தையும் மீறுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *