சென்னை: பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஸ்மார்ட் மோதிரத்தை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி உதவி மையம் (இங்குபேசன் செல்) மூலம் சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களைக் கொண்டு 'மியூஸ் வியரபிள்' ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்து, இந்தியா உள்பட 30 நாடுகளில் அதனை விற்பனை செய்கிறது. இதன் தொடர்ச்சியாக மியூஸ் வியரபிள் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்ச் போல, 'ஸ்மார்ட் ரிங்' (மோதிர வடிவ தொழில்நுட்பம்) ஒன்றை கண்டுபிடித்து உள்ளது.