தமிழகம்

நெடுஞ்சாலை போலீசாருக்கு நவீன வாகனம் வழங்கலாமே!


ஸ்ரீவில்லிபுத்துார்- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை போலீசாருக்கு நவீன ரக கார்கள் இல்லாததால் வி.ஐ.பி.,க்கள் வருகையின் போது, ​​விபத்து நேரங்களில் பணியிலும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

மதுரை மாவட்டம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரியில் இருந்து சிவகிரி , மதுரை – நாகர்கோவில் நான்கு வழி சாலையில் கே.உசிலம்பட்டி முதல் கோவில்பட்டி , மதுரை – தூத்துக்குடி நான்கு வழி சாலையில் ஆவியூர் விலக்கில் இருந்து பந்தல்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் விபத்து நேரத்தில் விரைந்து சென்று முதலுதவிக்கு உதவுதல், போக்குவரத்தை சீர் செய்தல், வி.ஐ.பி. ,வரும் வழித்தடங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நவீன கார்களில் வருகின்றனர். ஆனால் அவர்களின் கார்களை பின்தொடர்ந்து சென்று பாதுகாப்பு வழங்குவதில் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் செல்லும் வாகனங்கள் திணறுகின்றன. அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகள் நவீனரக கார்களில் பயணிப்பதால் அவர்களை விரட்டிச் சென்று பிடித்ததில் காலதாமதம், விபத்து அபாயம் உள்ளது. அடிக்கடி பழுதடைவதாலும் சம்பவ இடங்களுக்கு விரைந்து செல்வதிலும் ரோந்து போலீசார் சிரமத்தை சந்திக்கின்றனர். இதை கருதி ரோந்து போலீசாருக்கு நவீன ரக கார்கள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ……………… தாமதமின்றி வழங்குகஅதிகரித்து வரும் விபத்து நேரங்களில் மீட்பு பணியில் ஈடுபடுவதில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இரவு, பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வாகனங்கள் போதுமானதாக இல்லை. தற்போதைய சூழலில் விரைந்து செல்ல வசதியாக அதிநவீன வசதிகள் கொண்ட கார்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். -சுரேஷ் நெப்போலியன், வழக்கறிஞர், ஸ்ரீவில்லிபுத்துார்…………….

விளம்பரம்

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *