உலகம்

நிலச்சரிவில் 12 பெண்கள் பலி


மேடன்: இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சட்டவிரோதமாக தங்கச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு, மாண்டலே நடால் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் உள்ள சட்டவிரோத சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு 14 பெண்கள் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலச்சரிவு ஏற்பட்டு 14 பெண்கள் மண்ணில் புதையுண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி, 12 பெண்களின் உடல்களை மீட்டனர். இருவர் காயங்களுடன் தப்பினர்.

விளம்பரம்



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.