உலகம்

நாளை மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


இஸ்லாமாபாத், ஏப்.8- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பது சட்ட விரோதம் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ரத்து செய்த உச்சநீதிமன்றம், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சிகளும், சொந்த கட்சி எம்.பி.க்களும் போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து அவர் பெரும்பான்மை வாக்குகளை இழந்தார். ஆனால் அந்த தீர்மானத்தை துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். பிரதமரின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.
நாட்டின் சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, தலைமை நீதிபதி உமர் அடா பாண்டி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்தது. நேற்றிரவு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவரம்: நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது.
எனவே பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானமும் சட்டவிரோதமானது. எனவே நாடாளுமன்றம் கலைப்பு ரத்து செய்யப்படுகிறது. பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை காலை 10:00 மணிக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.