தேசியம்

நவராத்திரி: சீரடி சாய்பாபா கோவில் அக்டோபர் 7 முதல் மீண்டும் திறக்கப்படுகிறது


நவராத்திரியை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் கோவில்கள் திறக்கப்படுகின்றன. கோவிட் -19 தொடர்பாக அரசு வெளியிட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி, மகாராஷ்டிரா அரசு இப்போது மதத் தளங்கள் அனைத்தையும் திறக்க முடிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும், நவராத்திரியின் முதல் நாளிலிருந்து திறக்கப்படும். எனவே அக்டோபர் 7 முதல் மீண்டும் சீரடி சாய்பாபா கோவில், ஓம்காரேஸ்வரர் கோவில், மகாகாளேஷ்வர் கோவில் உட்பட அனைத்து ஆலயங்களும் திறக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில முதலமைச்சர் அலுவலகம் வெள்ளிக்கிழமையன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி விழாவை கருத்தில் கொண்டு கோவில்களை மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டாலும், கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் -19 இன் இரண்டாவது அலையில் மகாராஷ்டிரா மாநில பாதிக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள கோவில்கள் உட்பட மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நவராத்திரி விழா எதிர்வருவதை முன்னிட்டு மகாராஷ்டிராவில் மூடப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கோரி, பாஜக கோரி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல, ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவும் கோவில்களைத் திறக்கக் கோருகிறது.

மகாராஷ்டிராவில் இன்று செப்டம்பர் 24 ம் தேதி 3,286 புதியது வகையில் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. இத்துடன் சேர்த்து மாநிலத்தின் ஒட்டுமொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 65,37,843 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொடிய தொற்று நோயால், மேலும் 51 உயிர்கள் பலியானதால், பலி எண்ணிக்கை 1,38,776 ஆக உயர்ந்தது. மாநிலத்தின் இறப்பு விகிதம் 2.12 சதவீதமாக பதிவு செய்யப்படுகிறது.

மேலும் படிக்கவும் இனி திருப்பதி போக அளவை தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

வியாழக்கிழமை மாலை முதல் 3,933 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால், வைரஸ் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 63,57,012 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மகாராஷ்டிராவின் கோவிட் -19 மீட்பு விகிதம் 97.23 சதவீதமாக உள்ளது. எனவே, மத வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்போது, ​​கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் மருத்துவ ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிரவும்

முகநூலில் @ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் !!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *