
லாஸ் ஏஞ்சல்ஸ்-ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளினியை அறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், அடுத்த 10 ஆண்டுகளுக்கு விழாக்களில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்கர் கமிட்டி அறிவித்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. அப்போது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியும் நடிகையுமான ஜடா பிங்காட்டை கேலி செய்தார். உடனே மேடை ஏறிய வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
வில் ஸ்மித் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அகாடமியின் இயக்குநர்கள் குழு நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் கூடியது.
அதே சமயம் அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வில் ஸ்மித் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு விழாவில் விருதை வழங்க முடியாது.
விளம்பரம்