புதுடெல்லி: ஒவ்வொரு நாளும் மத்திய அரசுக்கு நாடு முழுவதுமிருந்தும் பல்வேறு வகையான புகார்கள் வருகின்றன. இது தொடர்பான கேள்விக்கு நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.
பொதுமக்களிடமிருந்து மத்திய அரசுக்கு நடப்பு ஆண்டில் ஜுலை மாதம் வரையில் மொத்தம் 14,41,416 புகார்கள் வந்தன. இவற்றில் 13,75,356 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு பதில்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் ‘மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைகள் தீர்வு மற்றும் கண்காணிப்பு மையம்’ (சிபிஜிஆர்ஏஎம்எஸ்) எனும் இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யலாம். இவை மத்திய அரசின் துறைகள் மற்றும் அலுவலகங்கள் தொடர்பானதாக இருக்க வேண்டும். இந்த புகார்களின் மீதான தீர்வுகள் மத்திய அரசின் கால் சென்டர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன” என தெரிவித்தார்.