
அன்னூர் – ‘துப்புரவு பணியில் மெத்தனம் காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, ஆய்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அன்னூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். துர்நாற்றம் வீசுகிறது. நகரின் பல பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நாம் சுத்தம் செய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும். ‘
இதையடுத்து, ‘அதிகாலையிலேயே பஸ் நிலையத்தை துப்புரவு பணியாளர்கள் கழுவ வேண்டும். ஒரு இடத்தில் கூட அழுக்கு, பான்பராக் கறைகள் இருக்கக்கூடாது. பஸ் நிலையம் முழுவதும் எச்சில் தொட்டிகள் வைக்கப்படும். துப்புரவு பணிக்கு செல்பவர்கள் அன்றைய தினம் சாக்கடையில் இருந்து வெளியேறும் அழுக்கு மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும். எந்த வார்டில் துப்புரவு பணி செய்தாலும், வார்டு பொதுமக்களிடம் பணிகள் குறித்து கேட்டறிவார்கள். பணி திருப்திகரமாக இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிக விடுமுறை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமும் 9 முதல் 10 டன் குப்பைகள் சேருகிறது. நிரந்தர பணியாளர்கள் 43 பேரும், தற்காலிக பணியாளர்கள் 87 பேரும், 130 பேர் பணிபுரிகின்றனர். ஆனால், துப்புரவு பணி திருப்திகரமாக இல்லை. துப்புரவு பணியை முழுமையாக செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது
பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு தொப்பி, கையுறை, காலணிகள், ஒளிரும் சட்டைகள், இரும்பு கொத்து, மம்பட்டி, தையல் கருவிகள், தெளிப்பான்கள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர் பிரதீப்குமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
விளம்பரம்