
Last Updated : 15 Sep, 2023 07:20 AM
Published : 15 Sep 2023 07:20 AM
Last Updated : 15 Sep 2023 07:20 AM

அனந்த்நாக்: காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் கதோல் கிராமத்தின் வனப்பகுதியில் ராணுவத்தினரும், ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மன்ப்ரீத் சிங், மேஜர் ஆசிஸ் தான்சக் ஆகியோர், ஜம்மு காஷ்மீர் டிஎஸ்பி ஹூமாயுன் பட் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக ஸ்ரீநகரின் பத்வாரா பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்ற வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவு அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட்’ (டிஆர்எப்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
தவறவிடாதீர்!