தேசியம்

தீப்பிடித்த ஓலா ஸ்கூட்டர்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு


கடந்த வாரம் சனிக்கிழமையன்று, புனேவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று ரோட்டில் தானாக தீப்பிடித்து எரிந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இதனால் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, வாகனத்தின் பாதுகாப்புத் தரப்பு குறித்து பயனர்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | வாழத் தகுதியற்ற நாடாக மாறுகிறதா ‘இலங்கை’! ராமேஸ்வரத்துக்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்

மேலும் இது குறித்து பதிலளித்த ஓலா இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் பேசும்போது, ​​”நாங்கள் எப்போதுமே பாதுகாப்புக்குதான் முன்னுரிமை அளிக்கிறோம். தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதற்கிடையில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பின் (DRDO) ஆய்வகங்களின் கீழ் இயங்கும் CFEESஸுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: 18 மாத டிஏ நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படுமா?

இது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பதற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆய்வு செய்ய தீ, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்திடம் (CFEES) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், CFEESஸுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவில், கண்டுபிடிப்புகள், பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் சம்பவங்களைத் தடுக்க உதவ வேண்டும் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீட்டில் பெரிய மாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZEETamilNewsடிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.