
திருவாரூர் அருகே அலிவலம் அருகே சென்றபோது முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த வீரரும் மேகலாவும் பதற்றமடைந்தனர். ஆனால் அதிர்ச்சியில் உறைந்திருந்த வீரரை இரும்பு கம்பியால் தாக்கிய முகமூடி கும்பல், மேகலா கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதில் பலத்த காயமடைந்த வீரர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். மேகலாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரராகவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்ளைச் செய்தியால் திருவாரூர் மக்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அலிவலம் பகுதியில் உள்ள பிரதான சாலை நீண்ட தூரத்திற்கு மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் எப்போதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக முக்கிய சாலைகளில் மின் விளக்குகளை அமைத்து இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.