Health

தினமும் எந்த நேரத்தில் நடப்பது சரியாக இருக்கும்? நிபுணர்கள் அட்வைஸ்

தினமும் எந்த நேரத்தில் நடப்பது சரியாக இருக்கும்? நிபுணர்கள் அட்வைஸ்


நடைபயிற்சி சிறந்தது என்றாலும், காலையில்  செய்வதா? அல்லது மாலையில் செய்வதா? என்ற கேள்வி எழும். இந்நிலையில் இதற்கு ஒரு சரியான விடையை நாம் கூற முடியாது. இந்நிலையில் உங்கள் வாழ்க்கை முறை மற்றும் தினசரி செய்யும் வேலையை சார்ந்தது.

அதிக இன்டென்சிட்டி பயிற்சி ( High-Intensity Interval Training) செய்வதால், நாம் அதிக நாட்கள் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று கூறுவது அனைவருக்கும் பொருந்தாது. குறிப்பாக நாம் நடை பயிற்சி செய்யும் நேரத்தை விட, நமது அன்றாட வாழ்வில், அதை நாம் எப்படி சிரமமில்லாது பொருத்திகொள்கிறோம் என்பதில்தான் ஆரோக்கியமான உடல் நமக்கு கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக பிட்நஸ் நிபுணர்கள் கூறுகையில், நாம் நடை பயிற்சியை அதிக அழுத்தத்தோடு செய்வதில் எந்த பலனும் இல்லை. நாம் இசைவுதன்மை இல்லாத கடுமையான மன அயர்ச்சி கொடுக்கும் உடல் பயிற்சி செய்வதால் எந்த பலனும் இல்லாமல் போகும்.

இந்நிலையில் வெறும் காலில் நடைபையிற்சி செய்வதால், நாம் வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை நன்மை தருகிறது. குறிப்பாக வெறும் காலில் குழந்தைகள் நடை பயிற்சி செய்யும்போது, பாதைகளில் உள்ள வளைவுகள் நல்ல முறையில் அமையும். மேலும் புவி ஈர்ப்பு விசை நமது பாதங்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கும். இதனால் நாம் வெறும் காலில் நடப்பது நல்லது.

நாம் நடைபயிற்சி செய்ய சதைகளின் சக்தி அதிகம் தேவை இருப்பதால், நமது உடலின் இயங்கியலுக்கு ஏற்ற நேரத்தில் செய்ய வேண்டும். குறுப்பாக மாலை 5 மணிக்கு நமது தசைகளின் சக்தி அதிகமாக இருக்கும்.

சுற்றுச்சூழலும் நடைபயிற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகாலை மற்றும் இரவு வேளையில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவாக இருப்பதால் அப்போது நடைபயிற்சி செய்யலாம். 

காலை அல்லது மாலையில் நடப்பதா ? என்று அதிக குழப்பம் இருந்தால், ஒரு நாள் முழுக்க கிடைக்கும் நேரத்தில் நடந்தால், உடல் எடை சீராக குறையும். மேலும் நாள் முழுவதும் நாம் சாப்பிடும் கலோரிகளை எரிக்க உதவும்.

அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு,  ரத்த அழுத்தம் பொதுவாக அதிகாலையில் அதிகமாக இருக்கும், என்பதால், அதிகாலையில் நடப்பதை தவிர்க்கவும்.

வயதானவர்கள், குளிர் அதிகம் இருக்கையில் நடைபயிற்சியை செய்யக்கூடாது, காலை 8 மணிக்கு பிறகு நடைபயிற்சி செய்யவும். வைட்டமின் டி அதிகம் கிடைக்கும். அதுபோல் மாலை 4 முதல் 4.30 மணி வரை நடைபயிற்சி செய்யலாம்.   



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *