தமிழகம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு


தாயமங்கலம்: சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த பங்குனி பொங்கல் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோவிலில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பக்தர்கள் பொங்கல் வைத்து, தீச்சட்டி, மாவிளக்கு, கரும்பு தொட்டில், உடல் உறுப்பு தானம், முடி காணிக்கை, ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டனர்.

நேற்று மாலை நடந்த மின்விளக்கு அலங்கார நிகழ்ச்சிக்கு அம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

விளம்பரம்Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.