உலகம்

தாடி வளர்த்த அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலிபான்கள் உத்தரவு


காபூல்: தாடி வளர்க்காத, பாரம்பரிய மத உடைகளை அணியாத அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த ஆண்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போதிருந்து, அவர்கள் பல கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், பெண்கள் தனியாக பறக்க தடை விதிக்கப்பட்டது. அதேபோல பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்கக் கூடாது. பூங்காக்களில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே, பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கடுமையான சட்டங்களை இயற்றிய தாலிபான்கள், தற்போது அரசு ஊழியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ‘அரசு ஊழியர்கள் தாடி வளர்க்க வேண்டும். பாரம்பரிய மத உடைகள், நீண்ட ஜிப்பா மற்றும் பேன்ட் மற்றும் தலையில் குல்லா அணிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மீறுவோர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.