தமிழகம்

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தாய், மகன் ஆயுள் தண்டனை


புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் வந்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தாள் (40). இவரது மகன் தினேஷ்வரன் (21). வந்தான்விடுதி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை தினேஷ் காதலித்து வந்தார். ஈஸ்வரியும் தினேஷை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஈஸ்வரியின் சம்மதத்துடன் அவருக்கு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. இதையறிந்த தினேஷ், ஈஸ்வரியின் வீட்டுக்குச் சென்று, தன்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனக் கூறி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

தாய், மகனுக்கு சிறை

மேலும், அவரது தாயார் சின்னத்தாள் மற்றும் ஈஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈஸ்வரியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ரெகுநாதபுரம் போலீஸார், தினேஷ், சின்னத்தாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்

புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி நடந்த இந்த சம்பவம் புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, ஈஸ்வரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முதல் குற்றவாளி தினேசுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தினேஷின் தாய் சின்னதாளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இரண்டு பேரும் அபராதத்தை செலுத்தாவிட்டால், தலா ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *