State

தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு | Chance of rain with thunder and lightning for 3 days in Tamil Nadu

தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு | Chance of rain with thunder and lightning for 3 days in Tamil Nadu


சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடமேற்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிசா-மேற்கு வங்கப் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல்3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 18, 19,20-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமானமழை பெய்யக்கூடும். அதிகபட்சவெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

செப். 14-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., சென்னை சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதேபோல, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *