வணிகம்

தபால் நிலையத்தில் பணம் போடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மத்திய அரசு அறிவிப்பு!


இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்நிலையில், புதிய நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தற்போதுள்ள வட்டி விகிதம் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட திட்டங்கள் சிறு சேமிப்புத் திட்டங்களாகும். இவற்றை தபால் அலுவலகம் மூலம் எளிதாக முதலீடு செய்யலாம். ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு மற்றும் நல்ல வட்டி ஆகியவை சிறு சேமிப்பு திட்டங்களின் சிறப்பு.

இந்நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைப் பார்ப்போம்.

காஸ் சிலிண்டர் விலை.. உங்கள் ஊரில் என்ன விலை?
சேமிப்பு வைப்பு – 4%

1 ஆண்டு வைப்பு – 5.5%

2 ஆண்டு வைப்பு – 5.5%

3 ஆண்டு வைப்பு – 5.5%

5 ஆண்டு வைப்பு – 6.7%

5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு – 7.4%

5 ஆண்டு மாத வருமானத் திட்டம் – 6.6%

5 ஆண்டு தேசிய சேமிப்புச் சான்றிதழ் – 6.8%

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) – 7.1%

கிசான் விகாஸ் பத்திரம் – 6.9%

செல்வ சேமிப்பு திட்டம் – 7.6%

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கடந்த மாதம் பிஎஃப் வட்டி விகிதம் 8.1% ஆக குறைக்கப்பட்டது. எனவே சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியும் விரைவில் குறையும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவியது. இந்நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.