வணிகம்

தபால் அலுவலகத்தில் இத்தனை சேவைகள்? உங்களுக்குத் தெரியாத தகவல்!


சிறப்பம்சங்கள்:

  • தபால் அலுவலகத்தில் கிடைக்கும் சேவைகள்
  • சாதாரண மக்களுக்கான முழு பட்டியல்

இந்தியாவில் தபால் அலுவலகங்கள் மற்றும் தபால் சேவைகள் நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு பரவியுள்ளன. இது தொலைதூர கிராமங்களில் உள்ளவர்கள் தபால் அலுவலகங்களில் சேவையைப் பெற உதவும். இதனால்தான் பல்வேறு புதுமையான சேவைகள் தபால் அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மத்திய அரசின் பல்வேறு சேவைகள் தபால் அலுவலகங்கள் மூலம் கிடைக்கின்றன. பான் கார்டு விண்ணப்பம், வருமான வரி தாக்கல், கொரோனா தடுப்பூசி முன்பதிவு போன்ற பரந்த சேவைகள் தபால் நிலையங்களில் கிடைக்கின்றன.

தொழில்நுட்பத்தைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாதவர்களுக்கு, தபால் அலுவலகம் மூலம் சேவைகளை எளிதில் அணுகலாம். தபால் அலுவலகங்களில் என்ன சேவைகள் உள்ளன? இந்த தகவலை இந்திய தபால் துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

ரூ. 500 முதலீட்டில் பென்சன் .. தபால் அலுவலகத் திட்டம்!
* வருமான வரி தாக்கல்

* கொரோனா தடுப்பூசி முன்பதிவு

* பான் அட்டை விண்ணப்பம்

* வாக்காளர் அட்டை விண்ணப்பம்

* பாஸ்போர்ட் விண்ணப்பம்

* பிரதமர் ஃபசல் பீமா யோஜனா விண்ணப்பம்

* ஃபாஸ்டேக் ரீசார்ஜ்

* பில் கட்டணம்

* வாழ்க்கை பிரமாணப் பத்திரம் தாக்கல்

இந்த சேவைகள் அனைத்தும் இந்தியா முழுவதும் பரவியுள்ள தபால் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கின்றன.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *