தேசியம்

தடுப்பூசியிலிருந்து தப்பிக்க மரத்தின் மீது ஏறிய வாலிபர்!


வைரஸ் தொற்று பல்வேறு விதமாக மாறுபாடு அடைந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, பல நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்வதை இலக்காக வைத்து தீவிரமாக வருகிறது.

மேலும் படிக்கவும் | பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 14 வரை விடுமுறை

இதேபோல புதுச்சேரியிலும் அனைத்து மக்களுக்கும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கில் அம்மாநில அரசு, சுகாதார துறை ஊழியர்களும் கண்காணிக்கின்றனர். இந்நிலையில் இன்று புதுச்சேரியின் கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து, கோனேரிகுப்பம் என்கிற கிராமத்திலுள்ள மக்களுக்கு, செவிலியர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றனர்.

அப்போது ஒரு வீட்டில் செவிலியர்கள் ஒரு வாலிபரை செவிலியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைத்தனர். ஆனால் அவர் தனக்கு மரம் வெட்டும் வேலை இருப்பதாகவும், அதனை முடித்து விட்டு தடுப்பூசி செலுத்துகிறேன் என்று கூறிவிட்டு வேகமாக வீட்டின் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கையில் அரிவாளுடன் மரம் வெட்டுவதை போல நடித்துக்கொண்டிருந்தார்.

அதனையடுத்து தடுப்பூசி செலுத்த வந்தவர்கள், அவரிடம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று பலமுறை கூறினர். ஆனால் அவர் தடுப்பூசி போட பயந்து கொண்டு வேணுமென்றால் நீங்கள் மேலே ஏறி வாருங்கள் என்று கூறிவிட்டு மரத்திலிருந்து கீழே இறங்காமல் மேலே உட்கார்ந்து கொண்டார். ஏற்கனவே இதுபோல் மருத்துவ சிகிச்சை செலுத்திக்கொள்ள பயந்த ஒருவர் சாமி வந்தது சுகாதார பணியாளர்களிடம் அட்டகாசம் செய்த நிலையில், தற்போது இவரது நகைச்சுவையான வீடியோ சமூகத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் | CORBEVAX , COVOVAX தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZeeHindustan Tamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *