தமிழகம்

தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்புள்ள மரகத லிங்க சிலை மீட்பு


அதன்பிறகு, நேற்று முன்தினம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வங்கி லாக்கரில் இருந்த மரகத லிங்க சிலையை மீட்டனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், “தர்மபுரம் ஆதீனம் சேர்ந்த கோயிலில் உள்ள பழமையான மரகத லிங்க சிலை திருடு போனதாக ஆதீனம் கண்காணிப்பாளர் சவுரி ராஜன் கடந்த 2016ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

தஞ்சாவூரில் இருந்து சாமியப்பாவிடம் இருந்து பச்சை மரகத லிங்க சிலையை மீட்டுள்ளோம். சிலையை மீட்க சென்ற போலீசாரிடம் குறிப்பிட்ட மரகத லிங்கம் சிலையை பாரம்பரியமாக வைத்து வருகிறோம். இது எங்கள் சிலை என்று கூறினார். அப்போது சிலைக்கான ஆவணத்தைக் காட்டச் சொன்னோம்.

மீட்கப்பட்ட மரகத லிங்கம்

ஆனால், அதற்கான எந்த ஆவணமும் இல்லை. அப்போது சிலை உங்களுடையது என்பதற்கான ஆவணம் இருந்தால் எடுத்து வந்து 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் என்றோம்.

அதைத்தொடர்ந்து வங்கி லாக்கரில் இருந்து சிலை மீட்கப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது ஜெர்மோலாஜிட் மூலம் மரகத சிலை என்பதை உறுதி செய்துள்ளோம். இதன் மதிப்பு ரூ.500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கோயிலில் மீட்கப்பட்ட சிலை திருகு காணாமல் போனதா? மரகத லிங்க சிலை காணாமல் போனதற்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? நாங்கள் எப்போதும் விசாரித்து வருகிறோம். அதன் முடிவில் முழு விவரம் தெரியவரும். ”

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *