வணிகம்

தங்க பத்திரத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? நிறைய விஷயம் இருக்கிறது!


சிறப்பம்சங்கள்:

  • தங்க பத்திர விற்பனையின் ஆரம்பம்
  • தங்கப் பத்திரத்தின் நன்மைகள்

தங்க பத்திர விற்பனை நேற்று தொடங்கியது. இந்த முறை ஒரு கிராமுக்கு ரூ. 4,807 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 வரை விற்பனை நடக்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தங்கப் பத்திரத்தில் பணம் வைப்பது நல்லது என்பது நிபுணர்களின் கருத்து. இந்த நேரத்தில் குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதால், இப்போது முதலீடு செய்வது ஒரு நல்ல தேர்வாகும்.

தங்க பத்திரத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? அதனால் என்ன நன்மைகள்?

தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால், தங்கப் பத்திரத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும். இது தவிர, ஆன்லைனில் தங்கப் பத்திரங்களை வாங்குபவர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ .50 தள்ளுபடி கிடைக்கும்.

உதாரணமாக, தற்போது ஒரு கிராமுக்கு ரூ. 4807 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்லைனில் தங்கப் பத்திரத்தை வாங்கினால், 50 ரூபாய் தள்ளுபடியுடன் ஒரு கிராமுக்கு 4757 ரூபாய்க்கு தங்கப் பத்திரத்தை வாங்கலாம்.

எஸ்பிஐ: உங்கள் கணக்கில் சிக்கல் உள்ளது.
நீங்கள் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்தால், நீங்கள் நிச்சயமாக ஆண்டுக்கு 2.50% வட்டி வருமானத்தைப் பெறுவீர்கள். உண்மையான தங்கத்தைப் போலல்லாமல், தங்கப் பத்திரங்களை சேமிப்பது எளிது. தங்கப் பத்திரங்களுக்கு மூலதன ஆதாய வரி இல்லை.

கடன் பெற தங்க பத்திரங்களை பிணையமாகப் பயன்படுத்தலாம். தவிர, தங்கப் பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி அல்லது வரி விதிக்கப்படவில்லை.

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *