தி எகனாமிக் டைம்ஸ் தமிழ் | புதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 29, 2024, காலை 10:06
தங்கத்தின் விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்குமா அல்லது அடுத்த சில நாட்களில் விலை குறையும் என காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு குறைவு என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,500 டாலருக்கு மேல் உள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. இதனாலும் தங்கத்தின் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளன.
தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்…. தங்கத்தின் விலை உயருவதற்கு முன்பே வாங்கி விடுங்கள்….
இந்த நிலையில் ஆகஸ்ட் 29ம் தேதியான இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,720 ஆக உள்ளது.
22 காரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஆபரண தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 6,715 என்ற நிலையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,720 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,501 ஆக உள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை நிலவரம்
முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.57,360 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகும் நிலையில், வெள்ளியின் விலையும் அப்படியே உள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.93.50 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.93,500 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.