லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில்உலக குரூப் 2 பிளே ஆஃப் ஆட்டத்தில் இந்தியா – மொராக்கோ அணிகள் இன்றுலக்னோவில் மோதுகின்றன. பிற்பகல் 2மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், யாசின்டிலிமியுடன் மோதுகிறார். அடுத்த ஆட்டத்தில் சுமித் நாகல், ஆடம் மவுன்ந்திருடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
2-வது நாளான நாளை (17ம் தேதி)நடைபெறும் ஆட்டத்தில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஜோடியானது மொராக்கோவின் எலியட் பெஞ்செட்ரிட், யூனெஸ் லலாமி லாரூசி ஜோடியுடன் மோதுகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் சுமித் நாகல், யாசின் டிலிமியுடன் மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் சசிகுமார் முகுந்த், ஆடம் மவுன்ந்திரை சந்திக்கிறார்.