தேசியம்

டெல்லியில் நாளை முதல் இரவு ஊரடங்கு!


இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை அலை முடிவடைந்து தற்போது பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தற்போது இந்தியாவிலும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்கவும் | ஒமிக்ரான் வைரஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 100% ஆபத்து உறுதி!

அதுமட்டுமின்றி பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. டெல்லியில் 290 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு 922 பேருக்கு புதிதாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4295 பேர் ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்திலும் 117 பேருக்கு நோய் தொற்று புதிதாக உள்ளது.

தமிழகத்திற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக 610 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கண்டிப்பான முறையில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு தேவையான மாநிலங்களை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஒவ்வொரு மாநிலங்களாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும் | ‘ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZeeHindustan Tamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *