மாநிலம்

“டெங்கு, மலேரியா, கொசு போல் தமிழகத்தில் திமுகவும் இருக்கக் கூடாது” – நடைபயணத்தில் அண்ணாமலை பேச்சு

“டெங்கு, மலேரியா, கொசு போல் தமிழகத்தில் திமுகவும் இருக்கக் கூடாது” – நடைபயணத்தில் அண்ணாமலை பேச்சு


திண்டுக்கல்: “டெங்கு, மலேரியா, கொசு எப்படி தமிழகத்தில் இருக்கக் கூடாதோ, அதேபோல் திமுகவும் இருக்கக் கூடாது” என்று கொடைக்கானலில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று (செப்.12) மாலை திண்டுக்கல் மாவட்டம் பழநி சட்டமன்ற தொகுதி கொடைக்கானலில் நடைபயணத்தை தொடங்கினார். கொடைக்கானல் நாயுடுபுரம் சித்திவிநாயகர் கோயிலில் தொடங்கி, ஏரிச்சாலை, பேருந்து நிலையம், அண்ணாசாலை வழியே மூஞ்சிக்கல் வரை அவர் நடந்து சென்றார்.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *