
முன்னதாக புதன்கிழமையன்று, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிஎஸ்என்எல் தனது சொந்த 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை இந்தியா முழுவதும் அமைக்கும் என்றும், நாடு முழுவதும் 1.12 லட்சம் மொபைல் டவர்களை அமைக்கும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், 6000 மொபைல் டவர்களை உடனடியாக நிறுவ பிஎஸ்என்எல் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் பிறகு கூடுதலாக 6000 டவர்கள் அமைக்கப்படும் என்றும், இறுதியாக 4ஜி நெட்வொர்க்கிற்காக நாடு முழுவதும் 1 லட்சம் டவர்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில மாதங்களில் 5ஜி தயாராகிவிடும் எனவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் 6000 மொபைல் டவர்களை அமைக்க ஆர்டரை பெற்றுள்ளது.
ஏப்ரல் 8ஆம் தேதி டிசிஎஸ் பங்குகளின் விலை ரூ.3,690.05 ஆக உயர்ந்தது.