
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, திருவண்ணாமலை நகரம் காமராஜர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை (எண் – 9841), மணலூர்பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை (எண் – 9261), வேங்கிக்கால் புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை (எண் – 9490),
பார்கள் உள்ள உணவகங்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகிய உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நவ.25-ம் தேதி பகல் 12 மணி முதல் 27-ம் தேதி இரவு 10 மணி வரை மூன்று நாட்களுக்கு மது விற்பனை நடைபெறாமல் மூடி வைக்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.