State

டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் மாலை 5 – இரவு 10 மணி வரை கட்டாயம் இருக்க உத்தரவு | Tasmac Supervisors are ordered to be present from 5 pm to 10 pm

டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் மாலை 5 – இரவு 10 மணி வரை கட்டாயம் இருக்க உத்தரவு | Tasmac Supervisors are ordered to be present from 5 pm to 10 pm


சென்னை: விற்பனை அதிகமாக இருக்கும் நேரமான மாலை 5 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக்நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள், மதுபானம்,பீர் வகைகளை அரசு நிர்ணயித்தவிலையைவிட கூடுதல் விலைக்குவிற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவார். மேலும், கூடுதல் விலை விற்பனை செய்வதைதடுக்கத் தவறிய, கடை மேற்பார்வையாளர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, கடை விற்பனை மேற்பார்வையாளர், மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணி வரை பணியில்இருக்க வேண்டும். குறிப்பாக, அதிக விற்பனை நேரமான மாலை 5முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் கட்டாயம் கடையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், முதல்முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.

இரண்டாவது முறையும் கடையில் இல்லையென்றால், மேற்பார்வையாளர்கள் குறைவான விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: