State

சென்னை – புதுப்பேட்டையில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் வாகன நெரிசல்! | Traffic issue in pudupet road

சென்னை – புதுப்பேட்டையில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் வாகன நெரிசல்! | Traffic issue in pudupet road


சென்னை: புதுப்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் செயற்கையான வாகன நெரிசல் ஏற்படுத்தப்படுகிறது. இப்பகுதிவியாபாரிகளுக்கு தொந்தரவு இல்லாமல் சாலையை அகலப்படுத்துவதுடன், நடைபாதையை மீட்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அண்ணா சாலையையும், பூந்தமல்லி சாலையையும் இணைக்கும் முக்கிய இணைப்பு வழித்தடமாக புதுப்பேட்டையில் உள்ள ஆதித்தனார் சாலை விளங்குகிறது. அண்ணா சாலையில் இருந்து புரசைவாக்கம், பெரம்பூர், பாரிமுனை, மாதவரம், திருவொற்றியூர் போன்ற வடசென்னை பகுதிகளுக்கு செல்லவும், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், எழும்பூர் நீதிமன்றம் செல்வதற்கும், புதுப்பேட்டை பகுதியில் உள்ள போலீஸாரின் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இவ்வழித்தடமே பிரதானமாக உள்ளது.

புதுப்பேட்டையில் உள்ள ஆதித்தனார் சாலையின் இருபுறங்களிலும் பழைய இரும்பு மற்றும் புதிய வாகனஉதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. இருசக்கரவாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கான போல்டு நட்டுகள் முதல் இன்ஜின் பாகங்கள் வரை அனைத்துப் பொருட்களும் இங்கு சில்லறை விலையிலும், மொத்த விலையிலும் விற்கப்படுவதால் தமிழகத்துக்கே இந்த புதுப்பேட்டை முக்கிய வணிக பகுதியாக விளங்குகிறது. இதனால் எந்நேரமும் இந்த சாலை நெரிசல் மிகுந்ததாகவே காணப்படுகிறது.

60 அடியிலிருந்து 20 அடிக்கு… – ஆனால் இங்குள்ள கடை வியாபாரிகள் தங்களது வாகனங்களையும், தங்களது கடைகளுக்கு வரும் இருசக்கர வாகனங்களையும், விற்பனைக்காக வைத்துள்ள வாகனங்களையும் சாலையின் நடைபாதையை மறைத்தும், சாலையோரத்தை ஆக்கிரமித்தும் நிறுத்துகின்றனர். இதனால் 60 அடி சாலையாக உள்ள இந்த சாலை 20 அடியாக குறுகிவிட்டது. இதனால் மாநகர பேருந்து போன்ற கனரக வாகனங்களோ அல்லதுகார்களோ இவ்வழித்தடத்தில் சென்றால்மற்ற வாகனங்கள் அவற்றின் பின்னாலேயே ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள தெருக்களிலும் நடந்து செல்வதற்கு மட்டுமே இடம் உள்ளது. அந்தளவுக்கு வாகனங்களின் நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

போலீஸார் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகும் புதுப்பேட்டை

ஆதித்தனார் சாலையை மீண்டும் ஆக்கிரமித்துள்ள வாகனங்கள்.

துணை ஆணையர் நடவடிக்கை: சமீபத்தில் போக்குவரத்து துணைஆணையர் சமயசிங் மீனா அதிரடியாக களமிறங்கி இந்த சாலையின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையா இது… என ஆச்சரியமூட்டும் வகையில் சாலையை அகலப்படுத்தி காட்டினார். அப்பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த நடவடிக்கை கானல்நீர் போல சில நாட்களிலேயே காணாமல் போய்விட்டது. இதனால் இந்த சாலையில் மீண்டும்ஆக்கிரமிப்புகள் முளைத்து பழையடி ஆகிவிட்டது. இதனால் ரயில்களைப் பிடிக்க அவசரமாக ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் செல்லும் பயணிகள் செயற்கையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்க நேரிடுகிறது.

இதுதொடர்பாக பெயர் கூற விரும்பாத ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறும்போது, புதுப்பேட்டை என்றாலே பழைய இரும்பு வியாபாரிகள்தான் ஞாபகத்துக்கு வருவர். அந்தளவுக்கு இந்தஏரியா வாகன உதிரி பாகங்கள் விற்பனைக்கும், உடைக்கப்படும் பழைய இரும்பு, அலுமினியம், தாமிரம் போன்ற பொருட்களின் விற்பனைக்கும் முக்கிய வணிக பகுதியாக உள்ளது. எனவே இங்குள்ள வியாபாரிகளுக்கும் அவர்களின் வியாபாரத்துக்கும் எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் சாலையின் ஏதாவது ஒரு பகுதியை ஒன்சைடு வாகன நிறுத்துமிடங்களாக அனுமதித்து, மற்றொரு பகுதியை விசாலமாக்கினால் எங்களைப்போன்ற வாகன ஓட்டுநர்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றார். அதேபோல இந்த சாலையின் இருபுறங்களையும் நடைபாதையையும் மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *