
Last Updated : 13 Sep, 2023 05:39 AM
Published : 13 Sep 2023 05:39 AM
Last Updated : 13 Sep 2023 05:39 AM

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. இந்தப் படம் அக்.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சினேகா, பிரியங்கா அருள் மோகன் நாயகிகளாக நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.
இதில் விஜய்யின் ஒரு வேடத்தை இளமையாகக் காண்பிக்க இருக்கின்றனர். இதற்காக படக்குழு சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தது. அங்கு கலிபோர்னியாவில் உள்ள நிறுவனம் ஒன்றில், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜியில் அவர் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் நினைத்தபடி தோற்றத்தை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் பணி முடிந்து நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்க்ளில் வைரலாகி வருகின்றன.
தவறவிடாதீர்!