தமிழகம்

சென்னையில் கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகளை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்


சென்னை: சென்னை மாநகரில் கடன் பிரச்சினை மனைவி தனது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம்.

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்தில் கடந்த ஓராண்டாக மணிகண்டன் (42) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவருக்கு பிரியா (36) என்ற மனைவியும், தரண் (10), தஹன் (1) என்ற குழந்தைகளும் உள்ளனர்.

மணிகண்டன் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஆனால் அவர் கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெளிவாக இல்லை. மேலும், மணிகண்டன் தனது நண்பர்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் பிரச்சினை கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி இருந்ததால் கடன் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆன்லைன் கேமில் மணிகண்டனுக்கு ரூ.1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி சைபர் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

இன்றும் அவ்வாறான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் வீடு நீண்ட நேரம் அமைதியாக இருப்பதைக் கண்டதாகவும், திறந்திருந்த கதவு வழியாகப் பார்த்தபோது சோகத்தை அறிந்ததாகவும் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் மணிகண்டன் தனது மனைவி பிரியா (36), தரண் (10), தஹன் (1) ஆகியோரைக் கொன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மணிகண்டனின் மனைவி கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்து கொலை, இரண்டு குழந்தைகளை தலையணையால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரே சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக துரைப்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தால், ஆலோசனைக்கு தற்கொலை தடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கான புதிய நம்பிக்கையைப் பெற சினேகா தொண்டு 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு அரசு உதவி எண் 104க்கு தொடர்பு கொண்டு பேசலாம்.

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *