தமிழகம்

சுரேஷ் ராஜன்: `ஸ்டாலின் வெளியேற்றம், துர்கா ஸ்டாலின் திருமணம்’- பின்னணி இதுதான்!


இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் – பாரதி தம்பதியின் மகன் நீல தமிழரசன், முன்னாள் எம்பி சங்கரலிங்கத்தின் பேத்தியும், திமுக குமரி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளருமான டாக்டர் வள்ளுவன் – மீனா தம்பதியின் மகள் டாக்டர் சஞ்சனா பகவதிக்கும் நாகர்கோவிலில் இன்று திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலினை சுரேஷ்ராஜன் நேரில் அழைத்திருந்தார். ஆனால், முதல்வர் திருமணத்துக்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்தார்.

திருமண விழாவில் முதல்வரின் சகோதரி செல்வி

இன்றைய திருமணத்திற்கு துர்கா ஸ்டாலின் தலைமை தாங்கி தாலியை எடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திய முதல்வர், அவரது மனைவி துர்காவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். முதல்வரின் சகோதரி செல்வி செல்வம், மோகனா தமிழரசு, முதல்வரின் மருமகள் கிருத்திகா உதயநிதி உட்பட மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் பலர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுரேஷ் ராஜன்

சுரேஷ் ராஜன்

சுரேஷ்ராஜன் சார்பில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினிடம் சுரேஷ்ராஜன் இல்ல திருமணம் குறித்து விசாரித்தோம். செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி மிகவும் நெருக்கமானவர். குறிப்பாக துர்கா ஸ்டாலின் இந்தியாவில் உள்ள பல ஆன்மிக தலங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்த போது அவருடன் சென்றவர்களில் முக்கியமானவர் சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி. கட்சித் தாண்டி குடும்ப நண்பர்களானதால் முதல்வரின் குடும்பத்தினர் திருமணத்தில் கலந்து கொண்டனர். ”

அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திலேயே, சுரேஷ் ராஜனின் மகன் திருமணத்தில் முதல்வர் குடும்பத்தினர் கலந்து கொண்டது சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.