
சுரிநாம்: தெ.அமெரிக்க நாடான சுரிநாமின் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விபத்துப் பகுதிக்கு காவல்துறை, ராணுவ அதிகாரிகள், மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். விபத்து நடந்தது நாட்டின் தென் பகுதியில். விபத்துக்குள்ளான சுரங்கம் அரசுக்கு சொந்தமானது அல்ல, சட்டபூர்வமானதும் அல்ல. மாறாக சிலர் தாமாகவே இணைந்து தங்கத்தைத் தேடி சுரங்கம் அமைத்து தங்கம் சேகரிக்க முயற்சித்துள்ளனர். அப்போது சுரங்கம் இடிந்துவிழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுரிநாமில் இதுபோல் மக்களே இணைந்து தங்கம் தேடுவது வழக்கமான சட்டவிரோத நடவடிக்கையாகவே உள்ளது.