வணிகம்

சுய உதவி குழுக்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு!


தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்காக குறிப்பாக பெண்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களும் ஆண்களும் தங்களுக்குள் இணைந்து செயல்படும் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன்படி, அவ்சார் என்ற திட்டத்தின் கீழ், சென்னை விமான நிலையத்தில் சுயஉதவி குழுவினருக்கு விற்பனை மையம் விரைவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயஉதவி குழுக்கள் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்தும் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாகும். சுயஉதவி குழுக்கள் ஆண்களும் பெண்களும் சிறு குழுக்களாக இணைந்து சுதந்திரமான வருமான ஆதாரங்களை உருவாக்க உதவுகின்றன. கரோனா பிரச்னைக்குப் பிறகு சுயஉதவிக்குழுக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சுயஉதவி குழுக்களை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், தமிழக அரசும் எடுத்து வருகிறது.

ஏப்ரல் முதல் எல்லாமே வேறு.. புதிய விதிகள் அமலுக்கு வந்தன!
அந்த வகையில், விமான நிலையங்களில் சுயஉதவி குழுக்களுக்கு இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தில் சுயஉதவிக்குழு மூலம் நடத்தப்படும் விற்பனை மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

விற்பனை மையத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் 100-200 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விற்பனை மையம் அமைக்க விரும்பும் சுயஉதவிக்குழுவினர் https://www.aai.aero/en/node/add/shg-user-detail என்ற இந்திய விமான நிலைய ஆணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.